ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு


ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
x

நெமிலி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட வேட்டாங்குளம், ரெட்டிவலம் மற்றும் நெடும்புலி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும் அதன் இருப்பு குறித்தும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொருட்களை எடைபோட்டு, செல்போன் செயலியில் சரிபார்த்தார்.

மேலும் நெடும்புலி ஊராட்சி ரேஷன் கடையின் அருகே உள்ள குப்பைகளையும், முட்புதர்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின் போது நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வினோத், பரமசிவன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story