ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடைகளில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் ேரஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட விவரம், மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில் போன்ற பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம், எடை, அளவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் மற்றும் அலுவலர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதா என பார்வையிட்டார். ஆய்வின் போது, துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) மிர்ஹசன் முசபர் இம்தியாஸ், தாசில்தார் ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ரேஷன் கடை பணியாளர்கள் உடனிருந்தனர்.