மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆற்காடு தாலுகா முப்பது வெட்டி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன செயற்கை கால் மற்றும் கை வழங்குவதற்கான அளவீடு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் ஆற்காடு தொகுதி ஜே. எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உதவி கலெக்டர் பூங்கொடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story