தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு


தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் 9 இடங்களில் புதிதாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த மையங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் உரிய மருத்துவர்கள், பணியாளர்களை பொது சுகாதாரத்துறை மூலம் நியமிக்க அவர் உத்தரவிட்டார்

ஆய்வின் போது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல குழு தலைவர் இந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர் ஷகிலா விஜய் ஆனந்த், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது, தாம்பரம் மாநகராட்சி 5-வது மண்டலத்திற்கு அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கி தரக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மண்டல குழு தலைவர் இந்திரன் மனுஅளித்தார். முன்னதாக தாம்பரம் இந்திய விமானப் படைத்தளத்தில் இந்திய விமானப்படைக்கு மருத்துவ பணியாளர்கள் சேர்க்கும் முகாமிற்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்த மாவட்ட கலெக்டருக்கு விமானப்படை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story