அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஆய்வு


அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறி கலந்துரையாடினார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறி கலந்துரையாடினார்.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குத்தாலம் அருகே பொரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவின் தரத்தினை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளி குழந்தைகளின் வருகை மற்றும் தினசரி தயார் செய்யும் உணவு வகைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story