ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ஆம்பூர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வடச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.29 லட்சத்தில் பணிகள் நடக்கின்றன. உதயேந்திரம் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.71.21 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டுமான பணி நடக்கிறது.

மேல்குப்பம் ஊராட்சி காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ7.56 லட்சம் மதிப்பீட்டில் 180 மீட்டர் பேவர் பிளாக் சாலை பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.28 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாருதல் மற்றும் புனரமைத்தல் பணி நடைபெறுகிறது. ஏரிக்கு அருகே ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மண் வரப்பு மற்றும் தென்னஞ்செடி பாத்திகள் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று கிறது. இவற்றை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நியாய விலை கடை கட்டுமானப்பணி, நியாய விலை கடைகளின் பொது மக்களுக்கு வழங்குவதற்கு வைக்க பட்டு குடிமை பொருட்கள், இ -சேவை மையத்தையும் அதனைத் தொடர்ந்து பாப்பனபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றகு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம் ரூ.32.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பெரியாங்குப்பம் ஊராட்சியில் நம்ம ஊர் சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி, பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். கலெக்டருடன் ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் சென்றிருந்தார்.

குறித்த காலத்தில்...

இந்த ஆய்வின் போது நடைபெற்று வருகின்ற அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகள், சமையல் அறை கட்டிடம், ஏரி தூர்வாரும் பணிகள், வரப்பு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் விஜயகுமாரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீபா மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story