ரூ.25¾ கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு


ரூ.25¾ கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ராணிப்பேட்டை, வாலாஜா நகராட்சிகளில் ரூ.25 ேகாடியே 72 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை, வாலாஜா நகராட்சிகளில் ரூ.25 ேகாடியே 72 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஆற்காடு நகராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு நியாய விலை கடையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா எனவும், அத்தியாவசிய பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதையும், பொருட்களின் தரத்தினையும் பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.11.52 கோடி மதிப்பீட்டில் 60 விற்பனை கூடங்கள், 300 சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஆட்டுச் சந்தை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் தினசரி நாளங்காடி கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ராணிப்பேட்டை நாகராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

பின்னர் ராணிப்பேட்டை நகராட்சியில் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் 30 கடைகள் மற்றும் 15 பஸ் நிறுத்தங்கள், உணவகம், ஏ.டி.எம். மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமானப் பணியினை ஆய்வு செய்தார்.

வாலாஜா

அதனை தொடர்ந்து வாலாஜா பஸ் நிலையத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் 18 கடைகள் மற்றும் பயணியர் நிழற்கூடங்கள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த அவர் வாலாஜா நகராட்சி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார்.

அங்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேவை குறித்து மருத்துவமனையை நேரடியாக பார்வையிட்டு திட்டம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த விவரம், உள்நோயாளிகள் எண்ணிக்கை, மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வாலாஜா நாகராட்சிக்குட்பட்ட சீனிவாச பெருமாள் கோவில் தெரு மற்றும் பெல்லியப்பா நகரில் உள்ள நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் பாத்துகாப்பாக வைக்கப்பட்டுளதா எனவும், அத்தியாவசிய பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மண்டல இயக்குனர் (நகராட்சி நிர்வாகம்) தனலட்சுமி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை. நகராட்சி பொறியாளர்கள் பரமராசு, சண்முகம், மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story