திருத்தணியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


திருத்தணியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

திருத்தணியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ரூ.29.33 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.11.70 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையத்தின் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருத்தணி நகரத்தில் குடிநீர் பற்றாக்குறை போக்க செயல்படுத்தப்பட்டு வரும் திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் அரக்கோணம் சாலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் தரைத்தளத்துடன் கூடிய 4 அடுக்கு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தங்கும் அறைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளில் போலியாக பயனாளிகளின் பெயரை எழுதி வைத்திருப்பது கண்டுபிடித்தார். உடனடியாக அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.


Next Story