சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு


சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு
x
சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை கலெக்டர் கார்மேகம் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை பணி

ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்கு சாலை குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்காடு மலைவாழ் மக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கொட்டச்சேடு முதல் கே.நார்த்தஞ்சேடு வரை 3.60 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள்

மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, ஏற்காடு வருவாய் தாசில்தார் தாமோதரன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story