ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கலெக்டர் ஆய்வு


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கலெக்டர் ஆய்வு
x

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் உள்ள வ.உ.சி. பூங்காவில் பெரியாரால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அருகில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கவும், பூங்காவினை சரியான முறையில் பராமரித்திடவும், சேதம் அடைந்த சிறுசிறு பகுதிகளை சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறுவர் பூங்காவில் பயன்பாடு இல்லாமல் உள்ள விளையாட்டு சாதனங்களை அப்புறப்படுத்தி புதிதாக சிறுவர்களை கவரும் வகையில் சாதனங்கள் அமைக்கவும் உத்தரவிட்டு, நாள் ஒன்றிற்கு சராசரியாக மொத்த பார்வையாளர்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு முறையாக அனுமதி கட்டணச்சீட்டு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள், அருங்காட்சியக வெளியீடு மற்றும் நூல் விற்பனை, பழங்கால நாணயங்கள், பண்டைக்கால ஆயுதங்கள், தொல்லியல், கொடுமணல் அகழாய்வு பொருட்கள், மரச்சிற்பங்கள், தானியப்பானைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அவருடன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story