8 தியேட்டர்களுக்கு கலெக்டர் நோட்டீஸ்
அனுமதி இன்றி துணிவு, வாரிசு படங்களை சிறப்பு காட்சியாக திரையிட்ட 8 தியேட்டர்களுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
அனுமதி இன்றி துணிவு, வாரிசு படங்களை சிறப்பு காட்சியாக திரையிட்ட 8 தியேட்டர்களுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
நடிகர் அஜித், விஜய்
பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ந் தேதி வெளியானது.
இந்த திரைப்படங்கள் கோவை மாவட்டத் தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படங்களை சிறப்பு காட்சியாக வெளியிட அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் கோவையில் உள்ள சில தியேட்டர்களில் எவ்வித அனுமதியும் பெறாமல் அதிகாலை 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டன.
இதனால் அனுமதி இன்றி சிறப்பு காட்சி திரையிட்ட கோவை கே.ஜி., சாந்தி, கற்பகம் காம்ப்ளக்ஸ், வேல் முருகன், அர்ச்சனா, தர்ச்சனா, அரசன், செந்தில் குமரன் ஆகிய 8 தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நோட்டீஸ்
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தியேட்டர்களில் அதி காலையில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் அனுமதி இன்றி 8 தியேட்டர்களில் துணிவு, வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண் டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.