கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்


கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2-வது மாவட்ட பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தணிக்கை செயலாளர் சரவணன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஜீப் ஓட்டுனர் ஆகிய பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். என்.ஆர்.ஜி.யில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பார்வதி, வீரபத்திரன், மகாலிங்கம், நாராயணசாமி, குமார், செல்வி, கோமதி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் மோகன் குமார் நன்றி கூறினார்.


Next Story