குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு


குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
x

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

வேலூர்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதை பார்த்தார். குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று அங்குள்ள சுகாதார வளாகத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story