விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரூ.78 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பழனி ஆய்வு
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரூ.78 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.7.17 லட்சத்தில் ஆசிரியர் மற்றும் மாணவிகள் கழிவறை கட்டிடம், பனையபுரம் ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி வடக்கு தொடக்கப்பள்ளியில் தலா ரூ.28.10 லட்சத்தில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம், ரூ.14.73 லட்சத்தில் பனப்பாக்கம் புனரமைக்கப்பட்டு உபரிநீர் வெளியேறும் மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம், செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, கருணாகரன், நடராஜன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், சந்திரசேகரன், பூவராகவன். துணைத்தலைவர் தினேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.