கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த 113 மாற்றுத் திறனாளிகள் மற்றும் 23 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
முன்னதாக இந்த முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அத்துடன் அவர் அங்கு இருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இதில் காது கேட்காத, வாய் பேச முடியாத, கால், கை ஊனமுற்ற, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனியார் துறை நிறுவனங்கள் நேர்காணல் நடத்தியது. இந்த முகாமில் 58 மாற்றுத் திறனாளிகள் மற்றும் 8 திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டது.