கள்ளக்குறிச்சியில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


கள்ளக்குறிச்சியில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது மந்தவெளியில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் மெயின்ரோடு வழியாக அண்ணா நகரில் முடிவடைந்தது.

பேரணியில் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு மின் சிக்கனம் தேவை இக்கனம், மின்கம்பத்தின் மீது கயிறைகட்டி துணி காயவைக்கும் பழக்கத்தை தவிர்க்கவும், மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் மின் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு, கல்லை தமிழ்ச்சங்க நிர்வாகி புகழேந்தி, சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தயாநிதி, அன்புக்குமார், பெஞ்சமின் மற்றும் நிர்வாகிகள், மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story