அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:46 PM GMT)

சாலைக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

இளையான்குடி

சாலைக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

இளையான்குடி அருகே சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆஷாஅஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வுசெய்தார். பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், ஸ்கேன் அறை, பெண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை, படுக்கை வசதிகள், மருந்துகள் இருப்பு, தேவையான மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளின் வருகை பதிவேடு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்தார்.

உணவின் தரம்

இதை தொடர்ந்து சாலைக்கிராமம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முறை, குழந்தைகளின் எடை மற்றும் உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையலறை, கழிப்பறை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சுகாதார துணை இயக்குனர் விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பெருமாள்சாமி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் முனியாண்டி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story