அபிகிரிபட்டை கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


அபிகிரிபட்டை கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆம்பூர் அருகே அபிகிரிபட்டைகிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே அபிகிரிபட்டை கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் ஊராட்சி அபிகிரிபட்டை கிராமத்தில் இருளர் சமூகத்ைத சேர்ந்த 30 குடும்பத்தினருக்கு குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, ஆழ்துளை கிணறு, ஆதார் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று அபிகிரிபட்டை கிராமத்துக்கு சென்றார். அங்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா நடந்த சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அந்த கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் அர்ஜுனன் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவரது தந்தை சிவாவை கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கலெக்டருடன் ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி உள்பட அதிகாரிகள் சென்றிருந்தனர்.


Next Story