மாணவர்களுக்கு வழங்கப்படும்உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு


மாணவர்களுக்கு வழங்கப்படும்உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும்உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காணை ஊராட்சி ஒன்றியம் பெரும்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவின் தரத்தை பார்வையிட்டதோடு அந்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு சுகாதாரமாக காலை உணவு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவை உண்டு சுவை மற்றும் தரத்தை உறுதி செய்ய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story