வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
x

எருமப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 13-வது வார்டில் புதிதாக வார சந்தை அமைக்கும் பணியையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் எருமப்பட்டி பேரூராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 18-வது வார்டில் துறையூர் முதல் செல்வராஜ் தோட்டம் வரை சாலை அமைக்கும் பணியையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து எருமப்பட்டி பேரூராட்சி வார சந்தை, பொதுக்கழிப்பிடம் ஆகிய இடங்களையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார். மேலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, எருமப்பட்டி அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், பேரூராட்சி பொறியாளர் சரவணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுரேஷ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Next Story