திருச்செங்கோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு


திருச்செங்கோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 11:14 AM GMT)

திருச்செங்கோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபாளையம், தேவனாங்குறிச்சி, மோடமங்கலம், தண்ணீர் பந்தல் பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி, ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும், ரூ. 12 லட்சம் மதிப்பதில் எஸ்.கே.பி. நகர் மெயின் சாலை பணிகளையும், ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் பணிகளையும், ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் ஊஞ்சபாளையம் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் தேவனாங்குறிச்சி ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.61 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், கீழேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் கூட பணிகளையும், நீர் தேக்க தொட்டி, புதிய ஆழ் துளை கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் ஆகிய பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story