சுதந்திரதினவிழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றினார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த கலெக்டர் விஷ்ணுசந்திரனை மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜலு, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர். விழாவில், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட கலெக்டர் தேசிய ஒருமைப்பாடு அமைதியை வலியுறுத்தி வெண்புறாக்களை பறக்கவிட்டார்.
விழாவில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 49 காவல் துறை அலுவலர்கள், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 288 அலுவலர்கள் என மொத்தம் 337 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
கலை நிகழ்ச்சி
விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் சுதாகர் பாகன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் பயிற்சி சிவானந்தம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) அபிதா ஹனிப், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.