ஊராட்சி நிர்வாகத்தில் கலெக்டரின் கார் டிரைவர் தலையீடு


ஊராட்சி நிர்வாகத்தில் கலெக்டரின் கார் டிரைவர் தலையீடு
x

ஊராட்சி நிர்வாகத்தில் கலெக்டரின் கார் டிரைவர் தலையிடுவதாக முதல்-அமைச்சருக்கு, பொதுமக்கள் புகார் மனு அனுப்பிஉள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், புல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கோகிலா. இவருக்கு பதிலாக அந்த ஊராட்சியில் நடக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும், அவரது கணவர் அருள் நாதன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அருள்நாதன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரின் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவர் தினமும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, தலைவரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அலுவலக பணிகளை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story