விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரணம் வழங்க கோரி ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

வறட்சி நிவாரணம் வழங்க கோரி ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்சு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதற்காக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்குள் திரளாக நுழைய முயன்றனர். அவர்களை கேணிக்கரை போலீஸ் நிலைய பகுதியில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்திற்குள் முற்றுகையிட செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநிலத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், சி.பி..ஐ. மாவட்ட செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன், மீனவர் சங்க மாநில செயலாளர் செந்தில்வேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story