கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நிவாரணம் வழங்கக்கோரி நெற்பயிர்களுடன் விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

நிவாரணம் வழங்கக்கோரி நெற்பயிர்களுடன் விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஊரவயல் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கருகிய நெற்பயிர்களுடன் முற்றுகையிட்டனர்.. பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 200 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தோம். விவசாய பணிகளுக்காக எங்களின் நகைகளை அடமானம் வைத்து பணிகளை செய்தோம். நாங்கள் எதிர்பார்த்த மழை பெய்யாமல் பொய்த்து விட்டது. இதனால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி சாவியாகி விட்டன. நெற்பயிர்களை நம்பி போட்ட பணம் அனைத்தும் கண்முன் கருகி வீணாகிவிட்டது. இதனால் நாங்கள் அனைவரும் செய்வதறியாது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு பயிர்காப்பீடு தொகையை முழுமையாக பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Related Tags :
Next Story