காலை உணவு திட்டத்தை கலெக்டர் திடீர் ஆய்வு


காலை உணவு திட்டத்தை கலெக்டர் திடீர் ஆய்வு
x

சேவூர் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

வேலூர்

காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது சமையல் கூடம் மற்றும் பாத்திரங்கள் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த பொங்கல், சாம்பாரின் தரத்தை சுவைத்து பார்த்தார்.

அப்போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story