பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
வேலூர்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற அவர் அங்கு கழிவுநீர் தேங்கி இருந்ததை பார்த்து அதை அகற்றி பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து காகிதப்பட்டறை பகுதியில் அரசு பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல காட்பாடி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும், அங்கன்வாடி மையத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ம் மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story