பத்திரப்பதிவு அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


பத்திரப்பதிவு அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Aug 2023 5:13 PM IST (Updated: 4 Aug 2023 6:10 PM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

கலவை

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி கலவைக்கு வந்தார். இங்கு அவர் வாழைப்பந்தல் செல்லும் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகதுக்கு சென்ற அவர் திடீர் ஆய்வு செய்து ஊழியர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டார்.

பத்திரப்பதிவு செய்யும் பதிவேடும் டோக்கன் முறையில் பத்திர பதிவு செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். அலுவலகத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததை அறிந்த அவர் கூடுதலாக 2 மின்விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பின் பத்திரப்பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் பத்திரப்பதிவு செயல்படும் விதத்தையும் கேட்டறிந்தார்/ அலுவலகத்தில் உள்ள கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள அவர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது கலவை தாசில்தார் இந்துமதி, உதவி பத்திரப்பதிவு அலுவலர் பழனி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்


Next Story