நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்  கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிளை தலைவர் மாயக்கண்ணன் தலைமையில், கிளை செயலாளர் அழகிரிசாமி, மண்டல தலைவர் சம்பத், பொருளாளர் ராஜமோகன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நேர்காணல் முறையை ஒழிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story