கல்லூரி பட்டமளிப்பு விழா


கல்லூரி பட்டமளிப்பு விழா
x

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு

விழாவை கல்லூரியின் தலைவர் புகழேந்தி தனபாலன் தொடங்கி வைத்து தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பிரேமலதா வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பார்த்தசாரதி சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். பட்டமளிப்பு விழாவில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் சென்னை பல்கலைக்கழக மதிப்பெண் தரவரிசைப்பட்டியலில் 9 மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். கல்லூரியின் இயக்குனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

1 More update

Next Story