கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
முதல்-அமைச்சர் கோப்பை
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கடந்த 6-ந்தேதி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் 12 முதல் 19 வயதுடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கபடி, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, சிலம்பம் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.
கல்லூரி மாணவ- மாணவிகள்
நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கபடி, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளில் மாவட்டம் முழுவதிலிருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.