அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் அள்ளிய கல்லூரி மாணவர் கைது


அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் அள்ளிய கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 10:48 AM GMT)

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் அள்ளிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அடுத்துள்ள திருவரங்கநேரி குளம் அருகில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் அள்ளிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் சோதனை

சாத்தான்குளம் பகுதியிலுள்ள திருவரங்கநேரி குளப்பகுதியில் அனுமதியின்றி சிலர் மணலை அள்ளி கடத்தி வருவதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, செட்டிக்குளம் திருவரங்கனேரி குளத்துக்கு அருகில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி சிலர் மணலை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அந்த இடத்திற்கு போலீசார் சென்றபோது, டிப்பர் லாரி டிரைவரும், உதவியாளரும் தப்பி ஓடிவிட்டனர்.

கல்லூரி மாணவர் கைது

போலீசார் பொக்லைன் எந்திர டிரைவரை பிடித்தனர். விசாரணையில் அவர், சாத்தான்குளம் தவசியாபுரத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் என தெரிய வந்தது. அவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிப்பர் லாரி டிரைவர், உதவியாளர் அதன் உரிமையாளர் சரவணன், ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர்.


Next Story