வகுப்பறையில் நுழைந்து மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது


வகுப்பறையில் நுழைந்து மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
x

செய்யாறில் வகுப்பறையில் நுழைந்து மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

திருவண்ணாமலை

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி செய்யாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (வயது 20). இவர், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியின் வகுப்பறைக்குள் தமிழரசன் நுழைந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் அசிங்கமாக பேசியும், கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்து என்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் தனியார் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story