'வாட்ஸ்-அப்பில்' பகிர்ந்த கல்லூரி மாணவர் கைது


வாட்ஸ்-அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவர் கைது
x

ராமர் ேகாவில் குறித்த கருத்துகளை ‘வாட்ஸ்-அப்பில்’ பகிர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

ராமர் ேகாவில் குறித்த கருத்துகளை 'வாட்ஸ்-அப்பில்' பகிர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

'வாட்ஸ்-அப்' குழு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அகில இந்திய புனித போராளி பழனிபாபா மாணவர்கள் அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் பெயரில் 'வாட்ஸ்-அப்' குழுவை ஏற்படுத்தி இளைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்.

கல்லூரி மாணவர் கைது

மேலும் ராமர் கோவில் கட்டினால் குண்டு வைத்து தகர்ப்போம் என்பன போன்ற கருத்துகளை 'வாட்ஸ்-அப்' குழுவில் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துரைராஜ், பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் லத்தீப்பை கைது செய்தனர். மேலும் அவரது 'வாட்ஸ்-அப்' குழுவில் உள்ள நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story