சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் உளுந்தூர்பேட்டை மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வரும் பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்(வயது 19) என்பவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக எலவனாசூர்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது கர்ப்பத்துக்கு காரணம் ராஜ் என்பதை அவள் பெற்றோரிடம் தெரிவித்தாள். பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.