சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பிடிபட்டார்


சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பிடிபட்டார்
x

சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் பிடிபட்டார்

கன்னியாகுமரி

நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகரில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து ஒழுங்குபிாிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் உத்தரவின் பேரில் போலீசார் கம்பளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அந்த கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை பயமுறுத்தும் விதமாகவும், அபாயகரமாகவும், அனுமதி இன்றி பொது இடத்தில் சாகசம் செய்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story