காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 20). இவர், சென்னை வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவருடைய காதலி நிரஞ்சனிடம் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிரஞ்சன், நேற்று முன்தினம் இரவு விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 20). இவர், சென்னை வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவருடைய காதலி நிரஞ்சனிடம் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிரஞ்சன், நேற்று முன்தினம் இரவு விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.