கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

அருமனை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

அருமனை அருகே உள்ள பனச்சமூடு பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார், முன்னாள் ராணுவ வீரர். தற்போது காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பத்மஸ்ரீ(வயது20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி சைக்காலஜி படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பத்மஸ்ரீ பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ெரயில் மூலம் வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து மகளை திலீப்குமார் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து திலீப்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

தூக்கில் தொங்கினார்

இதற்கிடையே பத்மஸ்ரீ காலையில் சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்கச் சென்றார். குடும்பத்தினரும் பத்மஸ்ரீஅறையில் தூங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். மதியம் பத்மஸ்ரீயை தாயார் அழைத்தபோது அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது, பத்மஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு...

பின்னர், இதுபற்றி திலீப்குமாருக்கும், அருமனை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பத்மஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பத்மஸ்ரீ தன்னுடன் படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவரும் காதலித்து வந்துள்ளனர். பத்மஸ்ரீயின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story