கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் சாவு
கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை
கேரள மாநிலம் மூணாறு செண்டுவர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் தனுஷ் துடியலூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வெளியே செல்வதாக கூறி அவரது அண்ணனின் காரை வாங்கி சென்றார். அவர், சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் சென்ற போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த தனுசை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தனுஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.