கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2023 5:00 AM IST (Updated: 24 Aug 2023 5:01 AM IST)
t-max-icont-min-icon

கணபதியில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்


கணபதி


கணபதியை அடுத்துள்ள கணபதிபுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகள் நித்யா ஸ்ரீ (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். மாணவி நித்யாஸ்ரீ கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். பின்னர் அவரை பெற்றோர் மீட்டனர்.

ஆனாலும் அவர் தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story