சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை


சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை
x

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காதல் தோல்வி காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காதல் தோல்வி காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை உரிமையன் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி அமுதவதி. இவர்களுடைய மகள் சாருஹாசினி (வயது 20). பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.ஈ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சின்னசாமி ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அமுதவதி அவினாசியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று மகளை படிக்க வைத்தார்.

வழக்கம்போல் வேலைக்கு சென்ற அமுதவதி நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீ்ட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது.

தூக்கில் தொங்கினார்

மேலும் வீட்டில் டி.வி. சத்தம் அதிகமாக கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு சாருஹாசினி தொங்கிக்கொண்டு இருந்தார்.

உடனே அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது.

காதல் தோல்வியா?

இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சாருஹாசினியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சாருஹாசினி தான் படிக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு மாணவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவரை, சாருஹாசினி காதலித்தாரா? அல்லது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு காதல் தோல்வியால் சாருஹாசினி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story