காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி


காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி
x

வடமதுரை அருகே, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தம்பிநாயக்கன்பாறைப்பட்டியை சேர்ந்தவர் நதியா (வயது 20). இவர், திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்கு கரூர் மாவட்டம் முத்தகாம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) அடிக்கடி வந்து சென்றார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று நதியாவின் பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த நதியா, தனது காதல் கணவர் ரமேசுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தார். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரமேஷின் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டதால் அவர்களுடன் 2 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story