தவறி விழுந்து கல்லூரி மாணவி காயம்


தவறி விழுந்து கல்லூரி மாணவி காயம்
x
தினத்தந்தி 9 Oct 2023 1:45 AM IST (Updated: 9 Oct 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து கல்லூரி மாணவி ஒருவர் காயம் அடைந்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தாலுகா டி.வாடிப்பட்டியை சேர்ந்த அன்புநாதன் மகள் மெர்சி பேரன்பு மேரி (வயது 27). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று, அவர் திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். இதற்கிடையே அதிகாலை 3.50 மணி அளவில் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை அடைந்தது. சில நிமிடங்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அப்போது கண் விழித்த மெர்சி பேரன்பு மேரி, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வேக, வேகமாக ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி ரெயில் நிலைய நடைமேடையில் விழுந்தார். இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story