விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி


விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி
x

செங்கம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

செங்கம் அருகே உள்ள பெரியதள்ளபாடி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18). இவர் செங்கத்தை அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி நீலம்மாள் என்பவர் வீட்டில் தங்கி தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னூர்மங்கலம் பகுதியில் இவரது வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது.

விழாவையொட்டி ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு இருந்தது. மதன்குமார் கையில் ஒலி பெருக்கியின் மைக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்தது

அந்த மைக்கில் மின்சாரம் கசிந்ததாக தெரிகிறது. அபர்போது அதனை கையில் வைத்திருந்த மதன்குமார் மீது பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மதன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புதுப்பாளையம் வழக்குப்பதிவு செய்து மதன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுப்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story