வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி


வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
x

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கோட்டை

கீரனூர்:

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் மோதிஸ்காந்த் (வயது 23). இவர் கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திருச்சி சாலையில் உள்ள களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதிஸ்காந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story