மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசார் விசாரணை


மேல்மலையனூர் அருகே           கல்லூரி மாணவி மாயம்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் செஞ்சியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாயமான மகளை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மாணவியை கன்னலம் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றிருப்பதாக பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story