கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தெய்வக்குமார். இவரது மகள் அப்சரா(வயது 21). கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து தெய்வக்குமார் தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story