கல்லூரி மாணவி மாயம்
கல்லூரி மாணவி மாயமானார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகள் தமிழ்ப்பொன்னி(வயது 21). இவர் கீழப்பழூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாககூறி சென்ற தமிழ்ப்பொன்னி மீண்டும் மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமுத்து தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து மாயமான தமிழ்ப்பொன்னியை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story