கல்லூரி மாணவி மாயம்; தோழி மீது புகார்

தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி கல்லூரியில் படித்து வந்தார். இந்த மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாய் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகளுடன் படித்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த தோழி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மகளுக்கு போன் செய்ததாகவும் அப்போது ஆணாக மாறி தனது மகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story