புதுப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்


புதுப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்
x

புதுப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மாயமானாா்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மாணவி. உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று மாணவி பெற்றோரிடம் கண்டரக்கோட்டை வரை சென்று வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.


Next Story